ADDED : பிப் 28, 2013 11:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.
* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்து போவான்.
* பொறாமையும், சச்சரவும் எங்கிருக்கிறதோ அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.
* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை. ஆனால் ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.
* சகிப்புத்தன்மையுள்ளவர்களே சந்தோஷமாக இருக்கிறார்கள்.
* சாந்த குணமுள்ளவர்களைக் கர்த்தர் நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.
* ஒவ்வொருவனுக்கும் தன் பாரத்தைத் தானே தான் சுமப்பான்.
- பைபிள் பொன்மொழிகள்